செவ்வாயில் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட ஆடியோ : பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி பதிவு செய்த ஆடியோவை வெளியிட்டது நாசா
செவ்வாய்க் கோளுக்கு நாசா அனுப்பியுள்ள பெர்சவரன்ஸ் விண்கலம் அங்கு முதன் முதலில் செய்த ஒலிப்பதிவை அனுப்பியுள்ளது.
செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் என்னும் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம் செவ்வாயில் நிலப்பரப்புத் தன்மையை அறிவதற்காக லேசர் கற்றைகளைச் செலுத்தி அதன் எதிரொலியை மைக் மூலம் ஒலிப்பதிவு செய்துள்ளது.
மார்ச் இரண்டாம் நாள் செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவை நாசா வெளியிட்டுள்ளது.
லேசர் கற்றைகளை மோதவிட்டு எடுக்கப்பட்ட ஒலிப்பதிவு செவ்வாய்க் கோளின் நிலப்பரப்பின் தன்மையை அறிந்துகொள்ள உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
Comments