நவீன கல்வியை நடைமுறைப்படுத்தவே புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது - குடியரசு தலைவர்
அறிவாற்றல், திறமை, ஆராய்ச்சி அடிப்படையிலான நவீன கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காகவே புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 3நாள் பயணமாக வந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையில் அண்ணா பல்கலைகழகத்தின் 41வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு குடியரசு தலைவர் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாகவி பாரதியாரின் ”பூரண ஞானம் பொலிந்த நன்னாடு” என்ற கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.
Comments