2 ரேடார்கள் பொருத்திய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பத் திட்டம் : எஸ் பேண்ட் ரேடாரைத் தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்பியது இஸ்ரோ
கூட்டு முயற்சிக்காக எஸ் பேண்ட் ரேடாரைத் தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ரேடார்கள் பொருத்தப்பட்ட புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இந்தியாவின் இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் 2014ஆம் ஆண்டில் உடன்பாடு செய்தன.
நிசார் எனப்படும் இந்தத் திட்டத்துக்காக எஸ் பேண்ட் ரேடாரை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதை நாசா தயாரித்த எல் பேண்ட் ரேடாருடன் இணைப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு ரேடார்களும் இணைக்கப்பட்ட பின் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும். இரண்டு ரேடார்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் 2023ஆம் ஆண்டு ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்கைக் கோள் எடுத்து அனுப்பும் படங்கள் மிகவும் துல்லியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Comments