அரசு ஊழியர் ஓய்வுபெறும் வரம்பை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு : எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசாணையை எதிர்க்கலாம்? - நீதிபதிகள்

0 12399
அரசு ஊழியர் ஓய்வுபெறும் வரம்பை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு : எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசாணையை எதிர்க்கலாம்? - நீதிபதிகள்

ரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசாணையை எதிர்க்க முடியும்? எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விளக்கம் கேட்டுள்ளது.

வேலையின்மையால் இளைஞர்கள் தவிக்கும் நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியுள்ளது ஏற்கத் தக்கதல்ல என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தச் சட்டப் பின்புலத்தின் அடிப்படையில் இந்த அரசாணையை எதிர்க்கலாம்? என நீதிபதிகள் வினவினர்.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் எதனடிப்படையில் தலையிடலாம் என்பது குறித்த விவரங்களை முறையாகத் தயார் செய்து வாதிட அறிவுறுத்தி வழக்கை மார்ச் 18ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments