கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்ததும் முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கண்காணிப்பு அறையில் அமர வைக்கப்பட்டு எந்தப் பின்விளைவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் இரண்டாயிரத்து 682 இடங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகத் தெரிவித்தார்.
Comments