மும்பையில் உள்ள பூங்காவில் திடீரென்று தோன்றிய மர்ம உலோகத்தூண்

0 38862
மும்பையில் உள்ள பூங்காவில் திடீரென்று தோன்றிய மர்ம உலோகத்தூண்

உலகின் பல்வேறு நாடுகளில் திடீரென்று தோன்றி பின்னர் மாயமாகும் உலோக தூண், இந்தியாவில் இரண்டாவது முறையாக, மும்பையில் உள்ள பூங்காவில் தோன்றியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல், மர்ம உலோக தூண்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் பாலைவன பகுதியில், 12 அடி உயரம் கொண்ட உலோக தூண் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உட்டா, ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 30 நாடுகளில் இது போன்ற தூண்கள் அடுத்தடுத்து தோன்றி மறைந்தன.

இந்நிலையில், தற்போது மும்பை பாந்த்ரா நகரில் உள்ள ஜோகர்ஸ்(Joggers ) பூங்காவில் மர்மமான முறையில் 7 அடி உயரம் கொண்ட உலோக தூண் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தூண்களின் பக்கத்தில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அவை என்னவென்று கண்டுபிடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரி ஆசிப் ஜகேரியா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments