சிவராத்திரியையொட்டி நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

0 2352
சிவராத்திரியையொட்டி நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டு வருகின்றனர்.

வாரணாசியில் உள்ள கங்கைக் கரையில் இன்று அதிகாலை பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடினர். மகாராஷ்ட்ராவில் சில கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபுல் நாத் கோவிலில் பக்தர்கள் இல்லாமலே வழிபாடுகள், ஆராதனைகள் செய்யப்பட்டன.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா கால பைரவர் ஆலயத்தில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இன்று ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 25 ஆயிரம் பக்தர்கள் இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் பெரும் திரளாக பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று இன்று காலை தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரியையொட்டி உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் கங்கையாற்றில் ஆயிரக்கணக்கானோர் நீராடிச் சிவனை வழிபட்டனர். மகாசிவராத்திரி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் கூடிய சிவபக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்குள்ள கங்கையாற்றின் படித்துறைகளில் நீராடினர். அதன்பின் சிவன்கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments