மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடங்கிய "சிவாலய ஓட்டம்" : 108 கி.மீ இடைவெளியில் உள்ள சிவாலயங்களுக்கு நடந்தே செல்லும் நிகழ்வு
மஹா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடந்தே சென்று வழிபாடு செய்யும் சிவாலய ஓட்டம் நேற்று மாலை துவங்கியது.
குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியும், திருநீறு பை சகிதமாக சிவராத்திரிக்கு முந்தைய தினம் தங்கள் ஓட்டத்தை தொடங்குகின்றனர்.
பாரம்பரியமான இந்த நிகழ்வில் கேரளாவைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர்.
முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கியுள்ள இந்த சிவாலய ஓட்டம், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை என நீளும். கடைசியாக 12-வது கோயிலான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் நிறைவுபெறும்.
ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுவதாக வரலாறு கூறுகிறது.
Comments