இலங்கையில் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு இந்தியாவுக்கு அழைப்பு
பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடா நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நாடுகள் தங்களின் கடல் எல்லைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்தக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஏப்ரல் 1ம் தேதி இலங்கையில் நடக்க உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடக்க உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் கூட்டமைப்பில் உள்ள மியான்மரில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடந்து வருவதால் அந்த நாட்டு ஆட்சியாளர்களை அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Comments