சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பாச் மீண்டும் தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பாச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இணையதளம் மூலம் நடந்த வாக்குப்பதிவில் ஒட்டுமொத்த 94 வாக்குகளுக்கு 93 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் வரும் 2025-ஆம் ஆண்டு வரை தாமஸ் பாச் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பாச் தேர்வான நிலையில் தற்போது மீண்டும் 4 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Comments