அதிமுக சார்பில் 15 மகளிர் போட்டி

0 4033
அதிமுக சார்பில் 15 மகளிர் போட்டி

அதிமுக வேட்பாளர் பட்டியலில் எம்பிக்கள் 2 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர்களாக மகளிர் 15 பேர் அதிமுக சார்பில் களம் காண்கிறார்கள்.

அதிமுக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள 2 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பி கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளராகவும், அதிமுக எம்பி வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திருத்தணி எம்எல்ஏவாக உள்ள நரசிம்மன், ஊத்தங்கரை எம்எல்ஏவாக உள்ள மனோரஞ்சிதம், பர்கூர் எம்எல்ஏவாக உள்ள ராஜேந்திரன் ஆகியோருக்கு மறுபடியும் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து விட்டு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, கங்கவல்லி எம்எல்ஏவாக உள்ள மருதமுத்து, ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி, ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோரின் பெயர்களும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை.

மேட்டூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ செம்மலையும் தேர்தலில் போட்டியிடவில்லை. சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜா, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோருக்கும் மறுபடியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன், கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ சந்திரபிரபா ஆகியோரின் பெயர்களும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இல்லை. ராமநாதபுரம் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சோளிங்கர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ சம்பத் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இல்லை. தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களில் 72 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதே போல மகளிர் 15 பேரும் போட்டியிடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments