நாடு முழுக்க நாளை மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

0 8443

நாடு முழுக்க உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது.

மாதம் தோறும் தேய்பிறையின் போது வரும் சதுர்த்தி திதி சிவராத்திரியாக அனுசரிக்கப்பட்டு வந்தாலும் மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி திதியில் அம்பிகை சிவனை வணங்கி வழிபட்டு வரம் பெற்றதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் 11 ஆம் தேதி இரவு சிவராத்திரியாகும். அன்று பகல் பொழுதில் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, இரவில் விரதம் இருந்து, விழித்திருந்து, சிவனை வணங்கி, மறு நாள் காலையில் சூரிய உதயத்திற்கு பின் நீராடி, சிவனை வணங்கி விரதம் முடிப்பது வழக்கம்.

மகாசிவராத்திரியை ஒட்டி 11 ஆம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெறுமென இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆனால் கோவில்களில் அமர்ந்து பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments