மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ராணுவத்தில் கேப்டன் பதவி
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ராணுவத்தில் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் ராணுவத்தில் லெப்டினன்டாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் பதவியில் இருந்துகொண்டு ராணுவத்தில் கேப்டன் பதவி பெற்ற முதல் ஆள் அனுராக் தாக்கூர் என்பது குறிப்பிடத் தக்கது.
#WATCH MoS Finance & Corporate Affairs Anurag Thakur becomes the first serving (BJP MP in current government) and Minister to become Captain in the Territorial Army as a regular commissioned officer.
He was commissioned into the TA in July 2016 as a Lieutenant. pic.twitter.com/r7pbiAM1dL
Comments