கன்னியாகுமரி பரப்புரையின் போது சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை சர்ப்ரைஸாக நிறைவேற்றிய ராகுல் காந்தி

0 5192

பள்ளி மாணவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தியைப்பற்றிய செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி யுமான ராகுல்காந்தி கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி , வழி நெடுக மக்களை சந்தித்து உரையாற்றி வந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

பின்னர், முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தக்கலையில் இருந்து புறப்பட்டு பரைக்கோடு பகுதிக்கு சென்றார். அப்போது சாலை ஓரமாக மாணவர் ஒருவர், கையில் காமராஜர் படத்துடன் கூடிய பதாகைய ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்.

இதை கண்ட ராகுல்காந்தி உடனடியாக காரில் இருந்து இறங்கி, சிறுவனை நோக்கி நடந்து சென்று, அவர் தோள் மீது கை வைத்துக் கொண்டே அவரை பற்றி விசாரிக்க தொடங்கினார்.

அப்போது, மாணவன், தனது பெயர் ஆன்டணி பெலிக்ஸ் என்றும் அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனது தந்தை பரைக்கோடு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருவதாகவும் கூறினார்.

அந்த மாணவனை அழைத்து கொண்டு அருகில் இருந்த டீக்கடைக்கு சென்ற ராகுல்காந்தி டீ குடித்தபடியே மாணவனிடம் விளையாட்டில் ஆர்வம் உள்ளதா என கேட்டார்.

மாணவனோ ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் உள்ளது என பதிலளிக்க, ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டபடியே ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்று வாங்கி தருவதாகவும் , சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதாகவும் உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


தற்போது , தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார் ராகுல் காந்தி. அச்சிறுவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷீ ஒன்றைப் வாங்கி பார்சல் மூலம் சிறுவனின் வீட்டுமுகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ஷீவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சிறுவன், ஷீவை பரிசளித்த ராகுல் காந்திக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

பள்ளி மாணவிகளுடன் நடனம் ஆடியது, தண்டால் எடுத்தது என ராகுலின் தமிழக பிராச்சாரப்பயணம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸீக்கு வெற்றியை தேடி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments