பும்ரா மணக்க போகும் தமிழ்ப்பெண்... யார் இந்த சஞ்சனா கணேசன் ?

0 99025
சஞ்சனா கணேசன்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தமிழ்ப்பெண் சஞ்சனா கணேசனை மணக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கோவாவில் வரும் 14, ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா மணக்கவுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரீத் பும்ரா 4வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். அடுத்து நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் அவர் பங்கேற்க மாட்டார் . தன் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பும்ரா மணக்கப் போவதாக சொல்லப்படும் சஞ்சனாவின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். தற்போது, 28 வயதான சஞ்சனா, மாடல் மட்டுமல்லாமல் விளையாட்டு ஆங்கராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் ஸ்டார் ஸ்போர்ட்சுக்காக சஞ்சனா தொகுத்து வழங்கினார். புனே சிம்போசியஸ் கல்லூரியில் பிடெக் படித்த சஞ்சனா பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பட்ட படிப்புக்கு பிறகு, சாஃப்ட் இன்ஜீனியராக வேலையை தொடங்கிய சஞ்சனா, மாடலிங்கிலும் கவனம் செலுத்தினார். 2013 ஆம் ஆண்டு 'Femina Officially Gorgeous' பட்டம் வென்றார்.

2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். ஐ.பி.எல் தொடரின் போது, மேட்ச் பாயிண்ட் என்ற பிரத்யேக நிகழ்ச்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்களுக்காக சஞ்சனா தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது, நடிகர் ஷாருக்கானும் பங்கேற்பது உண்டு. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மற்றும் பேட்மிண்டன் தொடர்களையும் சஞ்சனா தொகுத்து வழங்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்விலும் சஞ்சனா ஈடுபட்டு வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments