மோடி அரசு நீடிக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர்

0 6007
மோடி அரசு நீடிக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர்

மோடி அரசு நீடிக்கும் வரை போராட்டத்தைத் தொடர விவசாயிகள் தயாராக உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டித் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த நரேந்திர திகாயத் செய்தியாளர்களிடம் பேசினார். இது போன்ற போராட்டங்களை மத்திய அரசு இதுவரை கண்டதில்லை என்றும், இந்தப் போராட்டத்தைப் பல்வேறு உத்திகளைப் பின்பற்றி ஒடுக்கி விடலாம் என அரசு தவறாகக் கருதிவிட்டதாகவும் தெரிவித்தார்.

எந்த வகையிலும் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இந்த அரசு நீடிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நரேந்திர திகாயத் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments