பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

0 2317
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இரு பிரிவினரும் மாறி மாறி முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments