உலகம் முழுவதும் 1.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை சர்வதேச ஹேக்கர் குழு ஒன்று ஹேக் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களின் நேரடி காட்சிகளை சர்வதேச ஹேக்கர் குழு ஒன்று ஹேக் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா சிலிக்கான் வேலியில் உள்ள வெர்கடா (Verkada Inc) என்ற நிறுவனத்திடம் இருந்து அவை ஹேக் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பல மருத்துவமனைகள், குறிப்பாக பெண் நோயாளிகளை பரிசோதிக்கும் பிரிவு, போலீஸ் துறை, சிறைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றின் சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ஷாங்காய் ஆலை காட்சிகள் உள்ளிட்டவையும் திருடப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் 222 கேமராக்களை ஹேக் செய்துள்ளதாகவும், வெர்கடா நிறுவனத்திடம் உள்ள எல்லா சிசிடிவி காட்சி தொகுப்புகளும் தங்கள் வசம் உள்ளதாகவும் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments