முன்கள பகுதிகளில் இருந்து சீனா இதுவரை படைகளை வாபஸ் பெறவில்லை - அமெரிக்க ராணுவ கமாண்டர்
கிழக்கு லடாக்கில், இந்தியாவுடன் மோதல் ஏற்பட்ட சூழலில், சீனா ஆக்கிரமித்த பல முன்கள பகுதிகளில் இருந்து, இதுவரை, படைகளை, வாபஸ் பெறவில்லை என அமெரிக்காவின் மூத்த ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் பகுதிக்கான அமெரிக்காவின் ராணுவ கமாண்டர் பிலிப் எஸ் டேவிட்சன், சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி அந்நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் விளக்கம் அளித்தார்.
அப்போது இதைத் தெரிவித்த அவர், எல்லை மோதலின் போது, இந்தியாவுக்கு ராணுவ தகவல்கள், காலநிலை குறித்த முன்னறிவிப்பு, ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடைகள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்கியதாக கூறினார்.
அன்னியர் இடத்தை ஆக்கிரமிக்கும் சீனாவின் பேராசையே, லடாக் மோதலுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments