ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் நாட்டுக்காக அர்ப்பணிப்பு

0 3665
ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் நாட்டுக்காக அர்ப்பணிப்பு

ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச், நாட்டின் சேவையில் அர்ப்பணித்து வைக்கப்பட்டது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நீர்மூழ்கி கப்பலை கடற்படை தளபதி கரம்பீர் சிங், ஓய்வு பெற்ற கடற்படை தளபதி வி.எஸ்.ஷெகாவத் ஆகியோர் முறைப்படி கடற்படையில் இணைத்தனர்.

67.5 மீட்டர் நீளமுள்ள இந்த நீர்மூழ்கி, பிரான்சின் கடற்படை பிரிவால் வடிவமைக்கப்பட்டு, மும்பை மசாகோன் கப்பல்கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதே ரகத்தை சேர்ந்த கல்வாரி,காண்டேரி ஆகிய நீர்மூழ்கிகள் ஏற்கனவே கடற்படை சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் வாகிர் என்ற நீர்மூழ்கி கடந்த நவம்பரில் சேவையை துவக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments