இந்தியாவின் சேட்டிலைட் மேன்- ஐ கெளரவித்த கூகுள்
இஸ்ரோ முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
1932 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்த ராமச்சந்திர ராவ், இந்தியாவின் சேட்டிலைட் மேன் என அழைக்கப்படுகிறார்.
1972 ஆம் ஆண்டு இந்தியாவில் செயற்கைக்கோள் திட்டத்தை முன்னெடுத்த அவர், முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டா 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
இவர் 1984 முதல் 1994 ஆம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்ற உடுப்பி ராமச்சந்திர ராவ், 2017 ஆம் ஆண்டு காலமானார்.
Comments