மேகன் வெளியிட்ட நிறவெறி தொடர்பான குற்றச்சாட்டு கவலையளிப்பதாக உள்ளது - பக்கிம்ஹாம் அரண்மனை
மேகன் வெளியிட்ட நிறவெறி தொடர்பான குற்றச்சாட்டு கவலையளிக்கிறது என பக்கிம்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி தற்போது அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் மேகன் அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருந்த காலத்தில், குழந்தையின் தோல் கருப்பாக இருக்கக்கூடும் என அரச குடும்பத்தில் விவாதங்கள் எழுந்ததாக தெரிவித்திருந்தார்.
தங்களை பற்றி இங்கிலாந்து அரசக் குடும்பம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகனின் குற்றச்சாட்டுகள் கவலையளிக்கும் விதத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments