சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.2.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் அனுராக் தாக்கூர்
சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த அவர், அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 92 லட்சம் கணக்குகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தொழில் நிறுவனங்கள் 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் தொகை பெற முடியும் என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Comments