கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை அதிகம் மேம்படுத்துகிறது: லேன்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கையில் தகவல்
கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்பு சக்திகளை அதிகம் மேம்படுத்தும் வகையில் இருப்பதாக லேன்சட் பத்திரிக்கையில் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட ஆய்வு முடிவில் 80 புள்ளி 6 சதவீத வெற்றியடைந்ததை அடுத்து அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது கட்ட ஆய்வில் தடுப்பூசி சிறந்த முறையில் செயல்படுகிறது என்றும், பாதுகாப்பாக உள்ளது என்றும் பக்கவிளைவுகள் இன்றி எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக லேன்சட் மருத்துவ பத்திரிக்கை ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது.
Comments