மத்தியப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதம் என சட்டமியற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக கடந்த டிசம்பரில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இப்போது அந்த சட்டம் பேரவையில் நிறைவேறியுள்ளது. மதமாற்ற உள்நோக்கத்துடன் ஏமாற்றி திருமணம் செய்வது, பணம் கொடுப்பது, மிரட்டுவது, அச்சுறுத்துவது உள்ளிட்ட வழிகளிலும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மதம் மாற்றுபவர்கள் மீதும் இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
Comments