சட்டப்பேரவை தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக

0 11977
சட்டப்பேரவை தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக

தமிழ்நாட்டில், 187 தொகுதிகளில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். இதில், திமுக மட்டும், 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் வெற்றிகரமாக, தொகுதி பங்கீட்டை, திமுக முடித்துள்ளது. அந்த கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு, தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியனவற்றிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 47 இடங்கள் தவிர, 187 இடங்களில், உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதில், 174 தொகுதிகளில், திமுக போட்டியிடுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 இடங்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலை கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் என 13 கூட்டணி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்பது, புதன்கிழமைக்குள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை 11ஆம் தேதி வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments