திருவாரூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 18 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை

0 3777
திருவாரூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 18 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 18 கிலோ தங்கமும் 17 லட்ச ரூபாயும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தம்பிக்கோட்டை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், தனியார் வங்கிக்குச் சொந்தமான வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 17 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். அடுத்து வந்த கண்டெய்னர் வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாத 18 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.

சேலத்திலிருந்து நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக அவை எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments