குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சென்னை வருகை.. வேலூர், சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

0 3652
இரு நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

இரு நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு தங்கும் அவர், 10 ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், தனியார் பல்கலை கழக விழாவில் பங்கேற்கிறார்.

10 ஆம் தேதி இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், 11 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments