புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி..!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. அதிமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசும், 14 தொகுதிகளில் பா.ஜ.க. அதிமுக, பா.ம.க.வும் போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க. அதிமுக கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஏற்பட்ட இழுபறியால் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில் பா.ஜ.க மேலிடம், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து உடன்பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்றார்.
கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இப்போது முடிவு செய்யவில்லை என்றும் தேர்தலுக்கு பின் எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வார்கள் என்றும் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி , என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக, பாமக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.
மேலும் புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அதிமுக.,வுக்கு தலா ஒரு பதவியை ஒதுக்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Comments