மியான்மரில் குழந்தைகளைத் தாக்க வேண்டாமென போலீஸின் காலில் விழுந்த கன்னியாஸ்திரி
மியான்மரில் குழந்தைகளின் மீது வன்முறையைக் கையாள வேண்டாமென ஒரு கன்னியாஸ்திரி அந்நாட்டு போலீஸின் காலில் விழும் வீடியோ வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஜனநாயக அரசைக் கலைத்து ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு இதனை எதிர்த்துப் போராடுபவர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு குடியிருப்புப் பகுதியில் முன்னிருந்த போலீசாரிடம் குழந்தைகள், குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென ஒரு கன்னியாஸ்திரி காலில் விழுந்தார்.
இதனை எதிர்பாராத போலீஸார் அவரை எழுப்பி கன்னியாஸ்திரி காலில் விழுந்தனர்.
Comments