அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தேமுதிக தலைமை, மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொருளாளர் பிரேமலதாவும், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக போன்ற மாற்றுக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதைக் காட்டிலும், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், தனித்துப் போட்டியிட்டு, கட்சியின் உண்மையான பலத்தை அறிவது குறித்த ஆலோசனையை தேமுதிக தீவிரப்படுத்தியிருக்கிறது.
தேமுதிகவில் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 76 மாவட்டங்களின் செயலாளர்கள் ஒவ்வொருவரும், தங்களின் கட்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு, தலா 2 அல்லது 3 வேட்பாளர்களை இனங்கண்டு, பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments