திமுகவிலிருந்து அழைப்பு வராததால் ஆதரவை திரும்ப பெற்ற கருணாஸ்

0 22722
திமுகவுக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

திமுகவுக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக நேற்று அறிவித்திருந்தது.

திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க விரும்புவதாக கூறி, விருப்பமான தொகுதிகளையும் கடிதம் வாயிலாக திமுகவிடம் கேட்டிருந்தனர்.

இந்நிலையில் திமுகவிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் கொடுத்த ஆதரவை திரும்பப்பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

தங்களது அமைப்பு சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தை திரும்ப வழங்குமாறு அண்ணா அறிவாலயம் முன்பு முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி நிர்வாகிகள் திரண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments