'உங்க அன்புக்கு பில் போட எங்ககிட்ட மெஷின் இல்லை!'- மாமியார் மருமகளுக்கு சர்ப்ரைஸ் அளித்த ஹோட்டல் உரிமையாளர்

0 154172

ஈரோட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு , ஹோட்டல் ஒன்றில் இலவசமாக வழங்கப்படும் அனைத்து வகையான உணவுகளையும் மிச்சம் வைக்காமல் மாமியாரும் மருமகளும் மாறி மாறி ஊட்டிக்கொள்ளும் வினோதப் போட்டி நடைப்பெற்றது.

தமிழகத்தில் நிறைய வீடுகளில், மாமியார் - மருமகள் சண்டை என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனைவிட பயங்கரமானது என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. அவ்வாறு பல வீடுகளில் நடைப்பெறும் குழாய் அடி சண்டைகளும், குடுமிபிடி சண்டைகளையும் அதற்கு சாட்சியாய் அமைந்துள்ளன.

இந்த கருத்தை மாற்றும் வகையிலும் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்திலும் ஈரோட்டில் உள்ள பிரபல வேதாஸ் உணவகத்தில் ஒரு நூதன போட்டி நடைப்பெற்றது.

இந்த உணவத்திற்கு மாமியாரும் மருமகளும் ஜோடியாக வர வேண்டும். சைவம், அசைவம் என அனைத்து வகையான உணவுகளும் மாமி & மருமகளுக்கு இலவசமாக வழங்கபடும். மாமியாருக்கு பிடித்த உணவை மருமகள் ஆர்டர் செய்து அந்த உணவை ஊட்டி விட வேண்டும். அதே போல மருமகளுக்கு பிடித்தமான உணவை மாமியார் ஆர்டர் செய்து மருமகளுக்கு ஊட்டி விட வேண்டும். கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் மிச்சம் வைக்கமால் மாமியாரும் மருமகளும் சாப்பிட வேண்டும் என்பது தான் போட்டியின் விதி.

ஒரு வேளை சாப்பாட்டை மாமியாரோ, மருமகளோ மிச்சம் வைத்தால் சாப்பிட்ட உணவுக்கு பில்லை கட்டிவிட்டு இடத்தை காலி செய்யவேண்டும். இந்த போட்டியில் பங்கேற்ற மாமியார் மற்றும் மருமளை ஊக்கப்படுத்தும் விதமாக பார்டிசிபேசன் சர்டிபிகெட் போல விதை பந்துகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சுதா என்பவர் தனது மாமியார் செல்லம்மாளுடன் வந்து அவருக்கு பிடித்த மட்டன் பிரியாணியை ஆடர் செய்து, அத்தை சாப்புடுங்க அத்தை என ஆசை ஆசையாய் ஊட்டி விட்டார். அதேப்போல மருமகளுக்கு பிடித்த தந்தூரி ரொட்டி சிக்கன் உணவு வகைகளை மாமியார் ஆடர் செய்து ஆசையாய் ஊட்டி விட்டார்.

இந்த போட்டியில் பங்கேற்ற மாமி மற்றும் மருமகள் , கூறுகையில் உணவை மாறி மாறி ஊட்டி விடும் போது நெகிழ்ச்சியான தருணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மாமியாருக்கு மருமகளும், மருமகளுக்கு மாமியாரும் ஊட்டிவிட்ட அதிசயத்தக்க இந்த அரிய நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments