இந்தோ பசிபிக் பிராந்திய கடற்படை போர் பயிற்சியில் இந்தியாவுடன், பிரான்ஸ் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் கடற்படைகள் இணைந்து பயிற்சி
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 2 கடற்படை போர் பயிற்சியில் இந்தியாவுடன், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரம் பங்கேற்க உள்ளது.
குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி, வங்காள விரிகுடா கடலில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த பயிற்சியில் பிரான்ஸ் நாட்டின் கடற்படையும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் கடற்படைகள் இணைந்து ஓமன் வளைகுடாப் பகுதியில் மேற்கொள்ளும் பயிற்சி ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த பயிற்சியில் ஐக்கி அரபு அமீரகத்தின் கடற்படையும் இணைய இருக்கிறது.
Comments