ஆசிய நாடுகளில் தலைத்தூக்கியுள்ள ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் சீனா, மலேசியா, வியட்நாம், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேகமாக பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் வியட்நாமில் இந்த ஆண்டு தொடக்கத்திலும், மலேசியாவில் கடந்த மாதம் முதல் சபா மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தென் கொரியாவில் அக்டோபர் முதல் பன்றிக்காய்ச்சல் பரவிவருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆசிய நாடுகளிலுள்ள பன்றி இறைச்சி கூடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என சொல்லப்பட்டாலும், இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவில்லை.
Comments