புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பாஜக, அதிமுக இடையே தொகுதி உடன்பாடு; என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டி

0 4038

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளாக பாஜக, அதிமுக, பாமக 14 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாகவே இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள N.R.காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்
பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக, பாமக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

என்ஆர் காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க இருப்பதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments