சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 7 ஆண்டுகளில் இருமடங்கு உயர்வு - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 7 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்திருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2014 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 410 ரூபாயாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு சிலிண்டர் விலை 819 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் வரி வருவாய் 52 ஆயிரத்து 537 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் 11 மாதங்களில் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய் விலையும் கடந்த 7 ஆண்டுகளில் 14 ரூபாய் 96 காசுகளில் இருந்து 35 ரூபாய் 35 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments