புதுச்சேரி: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டது ரெனைசான்ஸ் பவுண்டேசன்

0 3147
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு 23 இடம் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு 23 இடம் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ரெனைசான்ஸ் பவுண்டேசன் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், என்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் அதிமுக, பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 28 தொகுதிளை கைப்பற்றும் என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மும்முனைப் போட்டி நிலவினால் திமுக - காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments