பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

0 1553
பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கையில் 55 சதவீதம் பெண்களுடையது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கும், தொழில்முனைவோர் கனவு நனவாவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24-ஆம் தேதி நிலவரப்படி பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகளில் 24 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் கணக்குகள் பெண்களுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments