இப்படி ஒரு ஹேர்ஸ்டைலா... கையோடு சலூனுக்கு அழைத்து சென்று கண் கலங்க கலங்க 'கட்' செய்த இன்ஸ்பெக்டர்!

0 90265
சிறுவன் வைத்திருந்த கோழிக்கொண்டை

கிருஷ்ணகிரியில் ஸ்டைல் என்று நினைத்து  கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிக் கொண்டிருந்த சிறுவனை காவல் ஆய்வாளர் ஒருவர் சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் மஹாராஜா கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமாக கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க  சிறுவன் அந்த பகுதியில் அலைந்து கொண்டிருந்தார். சிறுவனைப் பார்த்த காவல் ஆய்வாளர் அவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது

இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று நொந்துபோன காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சிறுவனை கையோடு அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே சிறுவனுக்கு முடிதிருத்தும் வைபவமும் அரங்கேறியது. தான் ஆசையாக வைத்திருந்த சிகை அலங்காரம் சிதைக்கப்படுகிறதே என்று நொந்துக் கொண்ட சிறுவன் அழுதபடியே இருந்தான். கண்களில் இருந்து கலங்க கலங்க கண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும், சிறுவனின் காதுகளில் மாட்டப்பட்டிருந்த கடுக்கண்ணையும் இன்ஸ்பெக்டன் கழற்றினார்.  சிறுவனின் தலை முடி ஒழுங்ககாக வெட்டப்பட்ட பிறகு சிறுவன் ஒரு ஜென்டில்மேன் தோற்றத்துடன் காணப்பட்டான். 

பின்னர் சிறுவனிடம் பேசிய காவல் ஆய்வாளார் கணேஷ்குமார்,படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது என்றும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அழுகையோடு நின்றிருந்த சிறுவனுக்கு அன்போடு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments