நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் ஒரே நேரத்தில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

0 1452
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் ஒரே நேரத்தில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் ஒரே நேரத்தில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை மாநிலங்களவை காலை நேரத்திலும், மக்களவை மாலையிலும் நடைபெற்று வந்தது.

இதனிடையே பட்ஜெட் கூட்டத் தொடர் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே முடிவுக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரச்சாரம் போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி ஏப்ரல் 8ம் தேதி வரை நீடிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மார்ச் இறுதிக்குள் நிறைவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசித்து வரும் சபாநாயகர் ஓம் பிர்லா விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments