மகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்

0 862
மகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்

மகளிர் தினவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதுரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கொரானா காலத்தில் முன்களப்பணியாற்றிய மகளிர்க்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 மதுரை விமான நிலையத்தில் மகளிர் மற்றும் பயணிகள் ஆட்டம் பாட்டத்துடன் மகளிர் தினவிழாவை கொண்டாடினர்தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

 மகளில் தினத்தில் சிதம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் நடந்த கோலப்போட்டியில், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்பட்டது.

 திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம், போன்ற செயல்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரிமாவட்டம் சுசீந்திரம் காவல்நிலையத்தில் பெண் போலீசாருக்கு விருந்தளிக்கப்பட்டது. இதேபோல் ஆரல்வாய் மொழியில் மகளிர் கருத்தரங்கு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments