புதுச்சேரியில் இழுபறி நிலை இன்று முடிவுக்கு வருமா?

0 2428
புதுச்சேரியில் இழுபறி நிலை இன்று முடிவுக்கு வருமா?

வேட்புமனுத்தாக்கல் தொடங்க இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், புதுச்சேரியில் கூட்டணியை இறுதி செய்வதில்  கட்சிகளுக்கிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி,தொகுதிப்பங்கீடு,வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு என ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் வேகம் காட்டி வருகின்றன.

ஆனால் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. கூடுதல் தொகுதிகளோடு, முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சியை இணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த கட்சியின் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இம்முறை 12 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்துவதால், காங்கிரசுடான தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபின் இன்றோ அல்லது நாளையோ தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

வேட்புமனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில்,புதுச்சேரியில் கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியாகாமல் உள்ளதால் புதுச்சேரி அரசியல் களம் ஆரவாரமற்று அமைதியாகக காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments