மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்

0 8014
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும் 8 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும் 8 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளநகர் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் வெளிநாட்டில் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், அவருடைய மனைவி ராஜேஸ்வரி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்தார்.

நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த மூவரும் காலை வந்து பார்த்தபோது, முன்பக்க மரக்கதவின் கீழ்ப்பகுதி உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 8 லட்ச ரூபாய் பணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. மூத்த மகளின் திருமணத்துக்காக வங்கியிலிருந்து எடுத்து வந்த பணம் நகை திருடுபோய்விட்டதாகக் கூறி, ராஜேஸ்வரி கதறி அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments