வணிகர் சங்க பேரமைப்பின் லாரி புக்கிங் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சிஐடியு தொழிலாளர்கள்

0 9024
திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினருக்கும் சிஐடியு தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவரின் மண்டை உடைந்தது.

திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினருக்கும் சிஐடியு தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவரின் மண்டை உடைந்தது.

பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிதாக லாரி புக்கிங் அலுவலகம் திறக்கப்பட்டது.

புதிய புக்கிங் அலுவலகத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர்களில் ஒரு தரப்பு குற்றம்சாட்டுகிறது.

எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி புக்கிங் அலுவலகத்துக்குள் நுழைந்த சிஐடியு தொழிலாளர்களுக்கும் அங்கிருந்த வியாபாரிகள், லாரி புக்கிங் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் கந்தன் என்பவரது மண்டை உடைந்தது.

இந்த மோதலின்போது, அலுவலக வாசலில் அமைக்கப்பட்டிருந்த பந்தல், சேர்கள் உள்ளிட்டவையும் அடித்து நொறுக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments