அரண்மனையில் இனவெறி தாக்குலுக்கு ஆளானாரா மேகன்?
தான் முதன்முதலில் கர்ப்பமாக இருந்த சமயத்தில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்குமோ என இங்கிலாந்து அரசக்குடும்பத்தினர் கவலை அடைந்ததாக மேகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலில் ஹாரியும், மேகனும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மேகன், இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டன், திருமணத்திற்கு முன்பே தனது உடை குறித்த விமர்சனங்களை முன்வைத்து தன்னை அழ வைத்ததாகவும், தன் பெயரை வேண்டுமென்றே கெடுக்கும் முயற்சியில் கேத் ஈடுபட்டார் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னுடைய தாயார் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதால், தான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் குழந்தையின் நிறம் குறித்த விமர்சனங்கள் எழுந்ததாகவும், தங்களுக்கு ஆர்ச்சி பிறந்தபோது அவரை இளவரசராக அறிவிக்கவில்லை என்றும் மேகன் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
Comments