தனித்து போட்டியா? கூட்டணியா? என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?

0 1988
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சிலரும், தனித்து போட்டியிட சிலரும் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சிலரும், தனித்து போட்டியிட சிலரும் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் தங்களுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியதோடு, முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க வலியுறுத்தியது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்தது.

கூட்டணி பேச்சை சுமூகமாக முடித்துக் கொள்ள நினைத்து என்.ஆர்.காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் நிபந்தனைக்கு பா.ஜ.க. சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகள், பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள், அதிமுகவுக்கு 6 தொகுதிகள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை என்.ஆர்.காங்கிரஸ் உறுதி செய்யவில்லை. அமித்ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் என்.ஆர்.காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த சூழலில், என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் நீடிக்கலாமா என கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதரவாக 50 சதவீதம் பேரும், எதிராக 50 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றும் இன்று அல்லது நாளை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடனான அவசர ஆலோசனைக்குப் பின், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலம் ஆகியோர் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் பிராணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments