"பாலியல் பலாத்கார வழக்கில் தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
பாலியல் பலாத்கார வழக்கில் தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்தே விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு ஊழியர் ஒருவர் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரியிருந்தார். கடந்த வாரம் அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் கோரிக்கையை பரிசீலிப்பதாக மனுதாரரின் வழக்கறிஞரிடம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தனது கருத்தை தலைமை நீதிபதி திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை திருமணம் செய்யச் சொல்லவில்லை என்றும் திருமணம் செய்யப் போகிறீர்களா? என்றுதான் கேட்டதாகவும் பாப்தே விளக்கம் அளித்தார். பெண்கள் மீது மிக உயர்ந்த மதிப்பை தாங்கள் கொண்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி பாப்தே தெரிவித்தார்.
Comments