2 லாரிகள் மூலம் நிலக்கோட்டை வந்த மின்னணு வாக்கு எந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி பிரநிநிதிகள் முன்னிலையில் சரி செய்யப்பட்டு, பின்னர் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ள தேர்தல் ஆணையம், ஏதாவது சந்தேகம் எழுந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
Comments