நடப்பாண்டில் 1000 பெண் பெயிண்டர்களை அங்கீகரிக்க நிப்பான் பெயிண்ட் திட்டம்
என்.சக்தி (nshakti) என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதாக நிப்பான் பெயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டத்தில் 425 பெண்களுக்கு பெயிண்டிங் குறித்து 15 நாட்கள் பயிற்சி அளித்து, தொழில்முறை பெயிண்டர்கள் என சான்றிதழும் வழங்கியுள்ளது.
இதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் பெண் பெயிண்டர்களை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இந்திய அலங்கார பிரிவு தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தில், இந்தியா முழுவதும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்களை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.
Comments